எதனால் சிறுநீரக மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன? எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும்? சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது?

 


எதனால் சிறுநீரக மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன

   வயதாகுதல் சிறுநீரக மண்டலத்தில் வியாதிகள் இருத்தல் மற்றும் அடிபடுதல் ஆகியவற்றால் தான் பொதுவாக பிரச்சனைகள் ஏற்படும். வயதாக ஆக சிறுநீரகங்களிலும் மாற்றம் ஏற்படுவதால் சிறுநீரகத்தால் திறம் பட கழிவுகளை அகற்ற முடியவில்லை. வயதான நிலையில் யூரட்டர் ப்ளாடர் மற்றும் யூரத்திராவில் உள்ள தசைகளும் இடுப்புத் தசைகளும் தங்களது வலுவை இழக்கக்கூடும் எனவே சிறுநீரை திறம்பட கட்டுப்படுத்த முடியாமலோ அல்லது சரிவர அகற்ற முடியாமலோ போய்விடும். இதனால் தேவையற்ற நேரத்தில் சிறுநீர் ஒழுகல் ஏற்படும். அடிக்கடி தொற்றும் ஏற்படலாம்

எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும்

   பொதுநல மருத்துவரை அணுகலாம் நெஃராலஜிஸ்ட் சிறுநீரகங்களில் ஏற்படும் வியாதிகளை கையாள்வார். யூராலஜிஸ்ட் சிறுநீரக மண்டலம் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வார். பெண்கள் சிறப்பு மருத்துவர் பெண்களின் சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது

   இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும். இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்பை சிலவகையான மருந்துகளால் தடுக்க முடியும். இது குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். உங்கள் உடல் பிரச்சினைகளுக்கு ஏற்ப சரியான உணவுகளை உட்கொள்ளவும். உணவு நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது. வருடத்திற்கு ஒரு முறை ஏனும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும்.

வலி மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்ள வேண்டியிருந்தால் மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளவும்.

சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்

யோகா எவ்வாறு உதவுகிறது

ஆசனப் பயிற்சிகள் பிராணாயாமப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் இடுப்பு தசைகளும் சிறுநீரக மண்டல தசைகளில் ஏற்படும் தொய்வை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

இதனால் சிறுநீர் ஒழுகல் போன்ற பிரச்சனைகளை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். ஆரம்ப நிலை பிராஸ்ட்ரேட் கேன்சர் உள்ளவர்கள் யோகா பயிற்சி மற்றும் சைவ உணவு ஆகியவற்றால் மரபணு மற்றும் புற்றுநோய் அணுக்களில் குறுகிய காலத்திலேயே மாற்றம் ஏற்படுத்த முடிந்ததாக ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதய வால்வு கோளாறுகளுக்கான சிகிச்சைகள் என்ன? What are the treatments for heart valve disorders? SBO PART TIME JOB

சிறு நீரக பிரச்சனைகள் காரணங்கள் என்ன என்ன? சிறு நீரக பிரச்சனைகள் – தீர்வுகள் என்ன என்ன? சிறு நீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது

நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் Chronic respiratory diseases - CRD என்றால் என்ன? தடை செய்யும் நிலைமைகள் என்றால் என்ன? கட்டுப்படுத்தும் நிலைமைகள் என்றால் என்ன?