வயிற்றுப்புண்களை விரைவில் ஆற்ற கூடிய எளிமையான ஆயுர் வேத தீர்வுகள் Simple Ayurvedic Remedies to Heal Stomach Ulcers Fast
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் , வயிற்றுப் புண்கள் அநேகரிடத்தில் பரவலாக காணப்படுகின்றன . வயிற்றுப் புண் வலியுடன் கூடியது மட்டுமல்ல , அது மிகவும் ஆபத்தானதும் கூட . இந்த சிக்கலைக் கண்டறிந்த உடனேயே சிகிச்சையைத் தொடங்குவது மிகவும் முக்கியம் , இல்லையெனில் அது மற்ற பிரச்னைகளுக்கு வழி வகுத்து விடும் . சரியாக தூங்காமல் இருப்பது , அழுத்தம் , நொறுக்குத் தீனிகளின் தன்மை மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவை உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. புகைபிடித்தல் , மது மற்றும் புகையிலை ஆகியவற்றை உட்கொள்வது வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது . பேரிக்காய் பேரிக்காயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன , இது வயிற்று புண்ணின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது . இதில் நார்ச்சத்து உள்ளது , இதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது . பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு சிறுகுடல் புண் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது . பாதாம் பருப் பு வயிற்று...