வயிற்றுப்புண்களை விரைவில் ஆற்ற கூடிய எளிமையான ஆயுர் வேத தீர்வுகள் Simple Ayurvedic Remedies to Heal Stomach Ulcers Fast
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், வயிற்றுப் புண்கள் அநேகரிடத்தில் பரவலாக காணப்படுகின்றன. வயிற்றுப் புண் வலியுடன் கூடியது மட்டுமல்ல, அது மிகவும் ஆபத்தானதும் கூட. இந்த சிக்கலைக் கண்டறிந்த உடனேயே சிகிச்சையைத் தொடங்குவது மிகவும் முக்கியம், இல்லையெனில் அது மற்ற பிரச்னைகளுக்கு வழி வகுத்து விடும்.
சரியாக தூங்காமல் இருப்பது, அழுத்தம், நொறுக்குத் தீனிகளின் தன்மை மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவை உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. புகைபிடித்தல், மது மற்றும் புகையிலை ஆகியவற்றை உட்கொள்வது வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது.
பேரிக்காய்
பேரிக்காயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன, இது வயிற்று புண்ணின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது, இதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு சிறுகுடல் புண் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது.
பாதாம் பருப்பு
வயிற்றுப் புண் உள்ளவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும். பாதாமை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழம் வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வாழைப்பழம் வயிற்று அமிலத்தை குணப்படுத்தும் ஆன்டி பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது. வயிற்று புண் நோயாளிகள், வாழைப்பழங்களை சாப்பிடுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பசு நெய்
வயிற்று புண் நோயாளிகளுக்கு பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
பசும்பால்
பசும்பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வர, எந்த விதமான புண்ணாக இருந்தாலும் 3 முதல் 6 மாதங்களில் குணமாகும்.
தேன்
காலை உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். தேன் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது, நீர் சத்து குறைதலை தடுக்கிறது மற்றும் உடலில் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இது திசுக்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது மற்றும் புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், தேனில் குளுக்கோஸ் பெராக்சைடு உள்ளது, இது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.
முட்டைக்கோஸ்
வயிற்றின் pH இன் சமநிலையின்மையால் அல்சர் ஏற்படுகிறது இது அமினோ அமிலமான குளுட்டமைனையும் கொண்டுள்ளது, இது செரிமான மண்டலத்தின் மியூகோசல் புறணியை பலப்படுத்துகிறது. இது புண்கள் வராமல் தடுப்பது மட்டுமின்றி, புண்களை வேகமாக குணப்படுத்துகிறது. முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டை சம அளவு எடுத்து ஜூஸ் செய்து, காலை மாலை ஒரு டம்ளர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பெருங்காயம்
சமையலறையில் இருக்கும் இந்த மசாலா வயிற்றுப் புண்களுக்கும் நன்மை பயக்கும்.
அவல்
அவல் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் கலந்து பொடி செய்து, 20 கிராம் பொடியை 2 லிட்டர் தண்ணீரில் காலையில் கரைத்து, இரவு வரை முழுமையாக குடிக்கவும்.
வெண்ணெய்
வயிற்றில் புண் உள்ளவர்கள் காலை மாலை இரவு வேலைகளும் வெண்ணையை உண்பதன் மூலம் வயிற்றுப் புண்கள் சீக்கிரமாக ஆறிவிடும்
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

கருத்துகள்
கருத்துரையிடுக