நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் Chronic respiratory diseases - CRD என்றால் என்ன? தடை செய்யும் நிலைமைகள் என்றால் என்ன? கட்டுப்படுத்தும் நிலைமைகள் என்றால் என்ன?
நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் Chronic
respiratory diseases - CRD
நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் (Chronic respiratory diseases - CRD)
என்பது காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரலில் பிற கட்டமைப்புகளை பாதிக்கும் நாள்பட்ட நோய்களின் ஒரு குழுவாகும். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நாள்பட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் .
புகையிலை புகையுடன் காற்று மாசுபாடு தொழிற்சாலை ரசாயனங்கள் மற்றும் தூசிகள் மற்றும் குழந்தை பருவத்தில் அடிக்கடி ஏற்படும் கீழ் சுவாசக் குழாய் தொற்றுகள் போன்றவை பிற ஆபத்து காரணிகள் ஆகும். Chronic respiratory diseases – CRD குணப்படுத்த முடியாது, இருப்பினும் காற்றுப்பாதைகளை திறந்து மூச்சு திணறலை குறைக்க உதவும் பல்வேறு வகையான சிகிச்சைகள் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் இந்த நிலைமைகளுடன் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும்.
தடை செய்யும் நிலைமைகள்: அடைபட்ட அல்லது குறுகலான காற்றுப்பாதைகள் அடங்கும், சுவாச நோய்கள் பெரும்பாலும் மரபு
மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் பற்றும் அல்லது சமூக நடத்தைகளால் ஏற்படுகின்றன .இதனால் நுரையீரல்கள் வெளியேற்றப்பட்டு பழைய காற்றை புதிய காற்றாக மாற்றுவது கடினம் .
1.நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் 65 மில்லியன் மக்கள் மிதமானது முதல் கடுமையானது வரையிலான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு (COPD) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று மில்லியன் பேர் இறக்கின்றனர்.
2. ஆல்ஃபா ஒன்று குறைபாடு
3.ஆஸ்துமா சுமார் 334 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். இது குழந்தைப் பருவத்தில் மிகவும் பொதுவாக நாள்பட்ட நோயாகும், இது உலக அளவில் 14 சதவீதம் குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகளில் ஆஸ்துமாவின் பரவல் அதிகமாரித்து வருகிறது.
4.மூச்சு குழாய் அலர்ஜி
5.சிஸ்ட்டிக் பைப்ரோசிஸ்
கட்டுப்படுத்தும் நிலைமைகள்
நுரையீரல் வைத்திருக்கக் கூடிய காற்றின் அளவை குறைக்கிறது. நுரையீரல் நெகிழ்ச்சி தன்மையை அல்லது விரிவடையும் திறமையை இழக்கக்கூடும்
1.சார்கோயிடோசிஸ்
2.நுரையீரல் பைப்ரோசிஸ்
3.நுரையீரல் புற்றுநோய் உலகில் மிகவும் பொதுவான உயிருக்கு ஆபத்தான கட்டி நுரையீரல் புற்றுநோயாகும் இது ஒவ்வொரு ஆண்டும் 1.6 மில்லியன் மக்களைக் கொல்கிறது மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்
கருத்துரையிடுக