சிறுநீர் கோளாறுகள் என்றால் என்ன? சிறு நீர்ப் பாதைத் தொற்று (Urinary tract infection) என்றால் என்ன? சிறுநீர் பிரச்சனை என்றால் என்ன?
சிறுநீர் கோளாறுகள் என்றால் சிறு நீர்
அமைப்புடன் (சிறு நீரகம், சிறு நீர்ப்பை, சிறுநீர் வடிகுழாய்) தொடர்புடைய பல்வேறு நோய்கள்
அல்லது நிலைமைகளைச் சொல்வதாகும். சிறு
நீர்ப் பாதைத் தொற்று, சிறு நீர்ப்பை அழற்சி, சிறுநீர் அடங்காமை, சிறுநீர்ப்பை கல்,
புரோஸ்டேட் பெருக்கம் போன்ற பல வகையான சிறுநீர் கோளாறுகள் உள்ளன.
சிறுநீர்
கோளாறுகளின் சில பொதுவான அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்,
சிறுநீரில் இரத்தம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்த
பிறகு எரிச்சல், கீழ் முதுகுவலி அல்லது அடிவயிற்றில் வலி.
சிறுநீர்
கோளாறுகளின் காரணங்கள்:
சிறுநீர்ப் பாதைத் தொற்று (UTI), சிறுநீர்ப்பை
அழற்சி (சிஸ்டிடிஸ்), சிறுநீர் அடங்காமை (சிறுநீரைத் தடுத்திடுவதற்குத் திறனற்ற நிலை),
சிறுநீர்ப்பை கல், புரோஸ்டேட் பெருக்கம்.
சிறுநீர் கோளாறுகளுக்கான சிகிச்சைகள்:
·
சிறுநீர்ப்பாதைத்
தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
·
சிறுநீர்ப்பை
அழற்சிக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலிநிவாரிகள்.
·
சிறுநீர்
அடங்காமைக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்து, அறுவை சிகிச்சை.
·
சிறுநீர்ப்பை
கல்லை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை.
·
புரோஸ்டேட்
பெருக்கத்திற்கு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை.
சிறு நீர்ப் பாதைத் தொற்று (UTI) :
சிறு நீர்ப்
பாதைத் தொற்று (UTI) என்பது சிறுநீரகப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்
ஒரு தொற்று நோயாகும்.
சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய்,
சிறுநீர்ப்பை, சிறுநீரகக்குழாய், ஆகிய பகுதிகளில் பாக்டீரியா எனப்படும் தீநுண்மம் தாக்குவதால்
சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படுகிறது.
இந்நோய்த் தொற்றானது
சிறுநீரக அமைப்பின் கீழ்ப்பகுதி (சிறுநீர்ப்பை) ஏற்படில் இதனை “சிறுநீர்ப்பைத் தொற்று”
எனப்படுகிறது. இது ஆரம்பநிலையாகும். மேல்பகுதியில் ஏற்படின் "சிறுநீரகத் தொற்று”
எனவும் அழைக்கப்படுகிறது.
சிறுநீர் பிரச்சனை என்றால் என்ன?
சிறுநீர் பாதை தொற்று, பொதுவாக UTI என்று
அழைக்கப்படுகிறது, இது மிகவும் பொதுவான சிறுநீர் பிரச்சனைகளில் ஒன்றாகும், மேலும் இது
சிறுநீர் பாதையில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இந்த தொற்று பெரும்பாலும் பூஞ்சை, பாக்டீரியா
மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது மற்றும் சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள்,
சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்ப்பையை உள்ளடக்கியது. இந்த நிலை மிகவும் வேதனையாக
இருக்கும், மேலும் தொற்று சிறுநீரகங்களுக்கு பரவினால் அதன் விளைவுகள் மோசமாகிவிடும்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்
கருத்துரையிடுக