நீரிழிவு நோய் தடுப்பு முறைகள்? நீரிழிவு நோய் வகை ஒன்று மற்றும் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்? நீரிழிவு நோய் விழிப்புணர்வு
நீரிழிவு நோய் தடுப்பு முறைகள்
நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும்.
அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது. அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவு வகைகள்,
விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன. சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும்.
புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது . வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன.
நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள்
நீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும்.
நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள்
நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான அடிப்படைச் சிகிச்சை முறைகளாவன:
· ஒரு நாளில் இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல்.
· உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.
·
தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்.
· பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்.
· உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல்.
நீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்
·
ஆரோக்கியமான உணவு முறை மேற்கொள்ளுதல்.
·
நாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல்.
·
உடற்பருமனைக் குறைத்தல்.
· கணையத்தை நன்கு முடுக்கிவிட்டு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவல்ல மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல்.
விழிப்புணர்வு
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு,
அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. 7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்
கருத்துரையிடுக