நீரிழிவு நோயின் அறிகுறிகள்? நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்? நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்

 

இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகும். மனித உடம்பில் சேரும் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலைகளையும் உருவாக்குகிறது.

கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதய அடைப்பு நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் போன்றவை ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு  குருதி  வழங்கும்  நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய  அறிகுறிகளை உருவாக்குகின்றது.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

v  அதிக பசி

v  அடிக்கடி சிறுநீர் கழிப்பது

v  அடிக்கடி தாகம்

v  மிக வேகமாக எடை குறைதல்

v  அதிகமாக சோர்வடைவது

v  வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்

v  கண்பார்வை மங்குதல்

v  திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

v  பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்

இரண்டாம் வகை நீரிழிவு நோயால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல்,  கோமா  மற்றும்  இறப்பு முதலானவை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும்.

 நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்

நீரிழிவு நோயினை உறுதி செய்வதற்கு  இரத்தத்தில்  உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.

 

 "This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதய வால்வு கோளாறுகளுக்கான சிகிச்சைகள் என்ன? What are the treatments for heart valve disorders? SBO PART TIME JOB

சிறு நீரக பிரச்சனைகள் காரணங்கள் என்ன என்ன? சிறு நீரக பிரச்சனைகள் – தீர்வுகள் என்ன என்ன? சிறு நீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது

நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் Chronic respiratory diseases - CRD என்றால் என்ன? தடை செய்யும் நிலைமைகள் என்றால் என்ன? கட்டுப்படுத்தும் நிலைமைகள் என்றால் என்ன?