சிறு நீரக பிரச்சனைகள் காரணங்கள் என்ன என்ன? சிறு நீரக பிரச்சனைகள் – தீர்வுகள் என்ன என்ன? சிறு நீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது
சிறுநீரக பிரச்சனைகள் காரணங்கள் மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமானது கழிவு நீக்கம் சிறுநீரக மண்டலம் நமது உடற்கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்பட செய்தால் மட்டுமே வாழ்வை நாம் முழுமையாய் அனுபவித்து வாழ முடியும். சிறுநீரக மண்டலம் குறித்து இங்கே பகிரப்படும் விளக்கங்களும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் நிச்சயம் பயனுள்ளதாகும் சிறுநீர் உருவாக மற்றும் வெளியேற காரணமாக இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் யூரட்டர் எனப்படும் குழாய்கள் ப்ளாடர் இவற்றைக் கட்டுப்படுத்தும் தசைகள் , நரம்புகள் இவற்றை சிறுநீரக மண்டலம் என்கிறோம் . சிறுநீரக மண்டலமானது , நுரையீரல் , சருமம் , குடல் இவற்றுடன் சேர்ந்து உடலில் உள்ள நீர் மற்றும் தாது பொருட்களை சமன் செய்கிறது . சிறுநீரக பிரச்சனைகள் – தீர்வுகள் 18 வயதிற்கு மேற்பட்டவர் சுமாராக ஒரு நாளில் 1 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றார் . ஆனால் பருகும் தண்ணீர் மற்றும் பானங்களைப் பொருத்தும் வியர்வை மற்றும் மூச்சுக்...