நீரிழிவு நோயின் அறிகுறிகள்? நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்? நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்
இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகும் . மனித உடம்பில் சேரும் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது . குறிப்பாக , இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலைகளையும் உருவாக்குகிறது . கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதய அடைப்பு நோய் , பக்கவாதம் , நெடுநாள் சிறுநீரகக் கோளாறு , நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண் , நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் போன்றவை ஏற்படும் . உயர் இரத்த அழுத்தம் , நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் , இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது . இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் ...