இடுகைகள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள்? நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்? நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்

படம்
  இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகும் .  மனித   உடம்பில் சேரும் சர்க்கரையை உடலுக்குத் தேவையான   சக்தியாக   மாற்ற இன்சுலின் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது . குறிப்பாக , இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலைகளையும் உருவாக்குகிறது . கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதய அடைப்பு நோய் ,  பக்கவாதம் ,  நெடுநாள் சிறுநீரகக் கோளாறு , நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண் , நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் போன்றவை ஏற்படும் . உயர்   இரத்த அழுத்தம் , நாடிகளின் சுவர்களில்   கொழுப்பு   படிந்து நாளடைவில் அடைபடுதல் ,  இருதயத் தசைகளுக்கு   குருதி   வழங்கும்   நாடிகளில்   ஏற்படும் நோய் மற்றும்   பாரிசவாதம்   ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது . இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி   சிறுநீர் ...

நீரிழிவு நோய் என்றால் என்ன? நீரிழிவு நோயின் வகைகள் என்ன? What is diabetes? What are the types of diabetes?

படம்
  நீரிழிவு நோய் என்றால் என்ன ?   நீரழிவு  ( நீர் + அழிவு ) (diabetes mellitus) என்பது   இ ரத்தத்தில்   உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க கூடிய   வளர்சிதைமாற்ற   சீர்குலைவுகளின் தொகுப்பாகும் . இது இரத்தச் சர்க்கரை நோய் (DIABETES) என்றும் அழைக்கப்படுகிறது . தசைகள் , திசுக்கள் மற்றும் மூளையில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றல் மூலமாக மனித உடலுக்கு தேவையான குளுக்கோசை தயாரிக்கிறது. தேவையான   இன்சுலினை   உடல்   உற்பத்தி செய்யாமல் இருப்பதும் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலையிலும் ரத்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது . இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கணையத்தால் வெளியிடப்படும் ‘ இன்சுலின் ’ என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது . நீரிழிவு நோயாளிகளில் , கணையத்தால் சுரக்கும் இன்சுலின் அளவு போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் அல்லது உடல் செல்கள் இன்சுலினை எதிர்ப்பதன் விளைவாகவும் ரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கிறது . இது பொதுவாக உயர்...