நிமோனியா பாதிப்பு ஏற்பட என்ன காரணம்? பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா? நிமோனியா எவ்வாறு பரவுகிறது? What causes pneumonia? Pneumonia caused by bacteria How is pneumonia spread?
நிமோனியா பாதிப்பு ஏற்பட என்ன காரணம் பாக்டீரியா வைரஸ்கள் ஆகியவற்றின் காரணமாகவே முக்கியமாக நீமோனியா ஏற்படுகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாவுக்கு பாக்டீரியாக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. இது மக்களிடம் தொற்றுவதுடன் பரவவும் செய்கிறது. 50 சதவீத நிமோனியா பாதிப்புகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்பது பொதுவாக காணப்படுகிறது உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி இது சிறுவர்களிடம் பொதுவாக அதிகமாக காணப்படும் பாக்டீரியா தொற்று என்பது தெரிய வருகிறது. ஹீமோபிலஸ் நிமோனியா கிளைமிடோபிலா நிமோனியா மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவையும் நிமோனியாவின் இதர சில வகைகளாகும் . வைரஸ் காரணமாக ஏற்படும் நிமோனியா பாரா இன்ஃளூயன்ஸா இம்ப்ளூயன்சா வைரஸ் கொரோனா வைரஸ் மற்றும் ரைனோ வைரஸ் ஆகியவற்றின் காரணமாகவும் நிமோனியா ஏற்படுகிறது . covid-19 வைரஸ் நுரையீரல் தாக்குகிறது கொரோனா தொற்றுக்கு உள்ளான பல நோயாளிகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என...